நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா உறுதி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், சுரேஷ்ராஜனுக்கு இன்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எம்எல்ஏ சுரேஷ்ராஜன், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்திலும் பங்கேற்று பல்வேறு ஊர்களுக்குச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார். தமிழகத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என இதுவரை 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா உறுதி #DMKMLA | #SureshRajan | #CoronaVirus https://t.co/6g5pZuVtuC
— Polimer News (@polimernews) July 27, 2020
Comments