ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு அறிவிப்பு
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு முறைகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மொழிப்பாடம், முதன்மைப் பாடங்களுக்கு கடந்த செமஸ்டரின் இண்டர்னல் மதிப்பெண்களில் இருந்து 70 சதவீதமும், அதற்கு முந்தைய செமஸ்டர் முடிவில் இருந்து 30 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இதேபோல் துணைப்பாடங்கள், விருப்பப் பாடங்களுக்கு முழுவதும் இண்டர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இண்டர்னல் மதிப்பெண் இல்லாதவர்களுக்கு ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளது.
ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு அறிவிப்பு #SemesterExam https://t.co/U4DGa4l7wh
— Polimer News (@polimernews) July 27, 2020
Comments