ரூ.2700 கோடியை கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது
தற்கொலை செய்து கொண்ட கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா, நிறுவன பணம் சுமார் 2700 கோடியை முறைகேடாக பயன்படுத்தினார் என அவரது மரணம் தொடர்பாக நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது தற்கொலை குறிப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரி ஒருவரை கஃபே காபி டே நிறுவனம் நியமித்து விசாரணை நடத்தியது.
அதில், கஃபே காபி டேயின் துணை நிறுவனங்களிடம் இருந்து தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மைசூர் அமால்கமேட்டட் காபி எஸ்டேட் நிறுவனத்திற்கு அவர் முன்தொகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை பங்குகள் வாங்கவும், கடன்களை திருப்பி செலுத்தவும் இதர செலவுகளுக்கும் அவர் பயன்படுத்தியதாக கஃபே காபி டே தெரிவித்துள்ளது.
Comments