சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி பிரதமர் அலுவலகத்துக்கு சுப்ரமணிய சாமி கடிதம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய சுப்ரமணிய சாமியின் கடிதம் கிடைக்கப் பெற்றதாக பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
மும்பையிலுள்ள தனது தொடர்புகள் மூலம் கிடைத்த தகவல்படி சுஷாந்த் மரண வழக்கை, துபாய் டான்களுடன் தொடர்புடைய பாலிவுட் பெரும் புள்ளிகள் சிலர் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், எனவே இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி அண்மையில் பிரதமர் அலுவலகத்துக்கு சுப்ரமணிய சாமி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அவரது கடிதம் கிடைக்கப்பெற்றதாக பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இது குறித்த பதிவொன்றை சுப்ரமணிய சுவாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.
Comments