கடைசி கால கிரிக்கெட் வாழ்க்கையில் தம்மை சரியான விதத்தில் BCCI நடத்தவில்லை: யுவராஜ் சிங் குற்றச்சாட்டு
கடைசிகால கிரிக்கெட் வாழ்க்கையின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தம்மை சரியான விதத்தில் நடத்தவில்லை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
304 ஒருநாள் போட்டிகள் விளையாடி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை அவர் குவித்துள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பை நாயகன் விருதையும் யுவராஜ் பெற்றுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு தற்போது அளித்துள்ள பேட்டியில், ஹர்பஜன், சேவாக், ஜாகீர்கான் போன்றோரும் பிசிசிஐ-யால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாகவும், இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவே இது திகழ்வதாகவும் கூறியுள்ளார். கடந்த காலங்களிலும் இதே சம்பவத்தை கண்டுள்ளதால் தாம் ஆச்சரியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments