ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு, கொரோனாவை கட்டுப்படுத்த உதவியதா..?
ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு, கொரோனாவை கட்டுப்படுத்த உதவியதா என்பதில் மருத்துவர்கள், வல்லுநர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
சந்தைகள், கடைகளில் சனிக்கிழமையே கூட்டம் திரள்வதை சுட்டிக்காட்டி, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் தொற்று பரவல் குறைந்ததற்கு தெளிவான ஆதாரம் இல்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால், முறையாக செயல்படுத்தாததை காரணமாகக் காட்டி, ஊரடங்கின் பயனை குறைத்து மதிப்பிடக் கூடாது என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். சனிக்கிழமைகளில் கூட்டம் திரள்வது கொரோனா பரவல் வேகம் எடுக்க வழிவகுத்து விடும் என்றும், அதேசமயம் சென்னை விரைவில் சமூகநோய் எதிர்ப்பு சக்தி என்ற கட்டத்தை எட்டிவிடக் கூடும் என்றும்கூட சிலர் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு தீர்வு அல்ல என கர்நாடகம் முடிவு எடுத்ததை சுட்டிக்காட்டும் வர்த்தகர்கள் தரப்பு பிரதிநிதிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழுஊரடங்கை அமல்படுத்துவது பயனற்றது என தெரிவிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு, கொரோனாவை கட்டுப்படுத்த உதவியதா..? #CoronaVirus | #SundayLockdown https://t.co/uDrintdWyl
— Polimer News (@polimernews) July 27, 2020
Comments