ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க 6 பிஎஸ்பி எம்எல்ஏக்களுக்கு உத்தரவு
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், காங்கிரஸுக்கு எதிராக வாக்களிக்கும்படி 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சி மேலிடம் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால் ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நிலவுகிறது. இதனிடையே, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ஆர்.குதா, லகான் சிங் உள்ளிட்ட (R Gudha, Lakhan Singh, Deep Chand, JS Awana, Sandeep Kumar and Wajib Ali) 6 பேர் காங்கிரஸில் சேர்ந்தனர்.
அவர்களை தகுதி நீக்கம் செய்ய கட்சி விடுத்த கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் 6 பேருக்கும் பொது செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா (Satish Chandra Mishra) கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் தேசிய கட்சி என்பதால் மாநில அளவில் முடிவெடுக்க முடியாது, அதை மீறினால் 6 பேரும் பதவி இழப்பார்கள் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
Comments