' ஆஸ்கர் வென்ற பிறகு என்னையும் பாலிவுட் புறக்கணித்தது ! ' - ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து ரசூல் பூக்குட்டி குற்றச்சாட்டு

0 5759

ஆஸ்கர் விருது வென்ற பிறகு எனக்கும் பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று  சவுண்ட் இன்ஜீனியர் ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைப்பதை தடுக்க ஒரு கூட்டம் செயல்பட்டு வருவதாக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமான் குற்றம் சாட்டியிருந்தார். ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து  ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த சவுண்ட் இன்ஜீனியர் விருதை பெற்ற ரசூல் பூக்குட்டியும் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் குற்றச்சாட்டுக்கு ட்விட்டர் பதிவு வழியாக பதிலளித்த இந்திப்பட இயக்குனர் சேகர்கபூர்,' ஆஸ்கர் விருது வென்ற உங்களை உங்களை ஹேண்டில் செய்வதில் பாலிவுட்டுக்கு பிரச்னை இருக்கிறது 'என்று கூறியிருந்தார். இந்த பதிவை டேக் செய்து ட்விட்டர் பக்கத்தில் ரசூல் பூக்குட்டி கூறியிருப்பதாவது,

 ''ஆஸ்கர் வென்ற பிறகு இந்தி சினிமா என்னை விலக்கி வைத்தது. யாரும் வாய்ப்பு தரவில்லை.இதனால் நிலைகுலைந்து விட்டேன். ஆனால், பிராந்திய மொழி படங்கள் என்னை கை விட்டு விடவில்லை. சில பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் , 'நீங்கள் தேவை இல்லை' என்று என் முகத்தில் அடித்தார் போல கூறின. ஆனாலும், நான் இந்த தொழிலை நேசிக்கிறேன். இந்த தொழில்தான் எனக்கு கனவு காண கற்றுக் கொடுத்தது. என்னை நம்பும் சிலர்  எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.

சுசாந்த்சிங்கின் இறப்புக்கு பிறகு பாலிவுட்டில் உள்ள நெப்டோயிஸம் குறித்து ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட கருத்தை தொடர்ந்து ரசூல் பூக்குட்டியும் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments