குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் இன்று அதனைத் தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சியை தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்ப அட்டைகளில் 4 கோடியே 44 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தலா இரண்டு வீதம் இன்று முதல் நியாயவிலைக்கடைகளில் முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது.
காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தரமான காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்| #CMEdappadiPalaniswami | #Mask https://t.co/w2Ei5FHLus
— Polimer News (@polimernews) July 27, 2020
Comments