பீகார், கர்நாடகா மாநிலங்கள் கொரோனா புதிய சிவப்பு மண்டலங்களாக உருவாகும் ஆபத்து
பீகார், கர்நாடகா, மேற்குவங்கம், ஆந்திர மாநிலங்கள் கொரோனா புதிய சிவப்பு மண்டலங்களாக மாறும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஏற்கெனவே மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா சிவப்பு மண்டலங்களாக திகழ்கின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு விகிதம், தினசரி பதிவாகும் அதிகபட்ச பதிவு உள்ளிட்ட 3 காரணிகளை அடிப்படையாக கொண்டு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை ஆய்வு நடத்தியுள்ளது.
அதில் ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம், பீகார், கேரளா, ஜார்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள், கடந்த சில மாதங்களாக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் மாநிலங்கள் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
Comments