கனவுகளின் நாயகன் கலாம்

0 4094
ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, விஞ்ஞானியாக பணிபுரிந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் அப்துல் கலாம்... ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது சிறப்புகளை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு

ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, விஞ்ஞானியாக பணிபுரிந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் அப்துல் கலாம்...  ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது சிறப்புகளை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு

சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்தபின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார் அப்துல் கலாம். 1969 ஆம் ஆண்டில், இஸ்ரோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட அவர், நாட்டின் முதலாவது உள்நாட்டு செயற்கைக்கோள் எஸ் எல் வி 3 திட்டத்தின் இயக்குனரானார்.

ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்பட்டது. இதையடுத்து பல்வேறு ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார் கலாம்.

இதன் எதிரொலியாக உருவானவைதான் திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள். பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியதால் மக்களிடையே அவரது பெயர் மேலும் பிரபலமானது. பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் கவுரவிக்கப்பட்டார் கலாம் 

பிரதமரின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய அப்துல் கலாமிற்கு குடியரசுத் தலைவர் பதவி தேடி வந்தது. நாட்டின் முதல் குடிமகனாக பதவி வகித்தபோதும், மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்துவதில் உற்சாகமாக செயல்பட்டு வந்தார். 

இந்த தேசத்தை நல்லரசாக்கவும் வல்லரசாகவும் இந்தியா 2020 என்ற புத்தகத்தை எழுதினார். தன் வாழ்வில் பட்ட துயரங்களையும் தூசிகளாக்கிய துணிச்சல் குறித்த அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் கலாம்.

மாணவர்களோடு தான் இருக்கும் பொழுது தான் நிறைவாக தோன்றுவதாக அடிக்கடி கூறி வந்தவர் அப்துல் கலாம். எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்று அடிக்கடி குறிப்பிட்ட அவர், கனவு காணுங்கள்.

அந்தக் கனவை நினைவாக்க பாடுபடுங்கள்... என்று மாணவர்களின் மனதில் வேரூன்ற செய்வதற்காக தமது வாழ்வின் கடைசி நாள் வரை உழைத்தார்.. அதனால்தான் இன்றும் மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்கிறார் கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments