அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கும் பிஎல்எம் போராட்டங்கள்
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மேலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் போராட்டம் மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜார்ஜ் ப்ளாயிட் என்ற கருப்பின இளைஞரை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து பிளாக் லைவ் மேட்டர் என்ற பெயரில் கருப்பின மக்களுக்கு நீதி கேட்கும் போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த இந்தப் போராட்டம் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் மீண்டும் தொடங்கியது. அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது கல்வீச்சு தீ வைப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது இந்த மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இதனையடுத்து போர்ட்லேண்ட், சிகாகோ, நியூயார்க், சியாட்டில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Comments