லஞ்சம் தர மறுத்த சிறுவனின் முட்டைக்கடையை உடைத்த நகராட்சி ஊழியர்கள் : அரசு சார்பில் வீடு வழங்க நடவடிக்கை
மத்தியபிரதேசத்தில் லஞ்சம் தர மறுத்த சிறுவனின் முட்டைக் கடை கவிழ்க்கப்பட்ட விவகாரத்தில், சிறுவனின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் வீடு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தூரில் சாலையோரத்தில் முட்டை விற்று வந்த சிறுவன் 100 ரூபாய் லஞ்சம் தராத காரணத்தால், நகராட்சி ஊழியர்கள் சிறுவனின் தள்ளுவண்டி கடையை கவிழ்த்து சேதப்படுத்திய சம்பவம் தேசிய அளவில் பேசுபொருளானது.
தொடர்ந்து, அரசியல்வாதிகள் உட்பட பலரும் சிறுவனுக்கு உதவ முன்வந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடும், சிறுவன் மற்றும் அவனது சகோதரனுக்கு இலவச கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Indore bjp government in Indore bad job ...... pic.twitter.com/dSX5ilhXbO
— Vikas Choudhary (@VikasCh05703641) July 23, 2020
Comments