ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசம் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.
தரமான பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசம் தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகக் கவசத்தைத் துவைத்துக் காயவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Comments