ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் அணு ஆயுதங்களை ரஷ்ய கடற்படைக்கு வழங்கப் போவதாக அதிபர் புதின் அறிவிப்பு

0 15685

ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அணு ஆயுத ஏவுகனைகளை ரஷ்ய கடற்படை வசம் வழங்க உள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் நடைபெற்ற கடற்படை தின விழாவில் கலந்து கொண்டு விமானத் தாங்கி போர் கப்பல்களின் அணிவகுப்பை பார்வையிட்ட அவர், ரஷ்யா வசம் உள்ள அனு ஆயுதங்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தவை என்றார். மேலும், நீர்முழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்பட்டு, எதிரி கப்பல்களை அழிக்கும் அதிவிரைவு ஏவுகணைகளை, கடற்படை வசம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments