கொரோனாவை மாய, மந்திரத்தில் குணப்படுத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவர் கைது
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கொரோனா வைரசை மாய, மந்திரத்தில் குணப்படுத்துவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் ((பாபா)) ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹபீஸ் பெட் ஹனிஃப் காலனியை சேர்ந்த இஸ்மாயில் பாபா என்பவர், கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி, காய்ச்சல், இருமல், சளி அறிகுறியுடன் வருபவர்களுக்கு மந்திரங்கள் செய்து எலுமிச்சை பழம் மற்றும் விபூதி வழங்கி ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அவர் வசூலித்துள்ளார்.
இதுபோல 70 க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரை கண்காணித்து வந்த போலீசார், இஸ்மாயில் பாபா மோசடி செய்வதை கண்டுபிடித்து கைது செய்தனர்.
கொரோனாவை மாய, மந்திரத்தில் குணப்படுத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவர் கைது #Hyderabad #coronatreatment #Cheating #Arrest https://t.co/bH9AVKCAD6
— Polimer News (@polimernews) July 26, 2020
Comments