மகள்களை கொண்டு உழுத விவசாயி - உதவி செய்ய முன்வந்த நடிகர் சோனு சூட்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 மகள்களை கொண்டு நிலத்தை உழுத விவசாயிக்கு 2 காளை மாடுகள் அளிக்கப்படும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
மதனப்பள்ளியை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவுக்கு, கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட இழப்பால் உழவு பணியில் மாடுகளை ஈடுபடுத்த பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் 2 மகள்களை கொண்டு, விவசாய நிலத்தை அவர் உழுதார்.
அந்த வீடியோ வெளியாகி வைரலாகவே, அதை கண்டு சோனு சூட் உதவி செய்ய முன்வந்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், நாளைக்குள் அந்த விவசாயிக்கு ஒரு ஜோடி காளை மாடுகள் கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். 2 மகள்களை படிப்பில் கவனம் செலுத்தவிடும்படியும் விவசாயியை நடிகர் சோனு சூட் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments