இமாசல் எல்லையில் இந்தியாவை நோக்கி 20 கி.மீ.க்கு சீனா புதிய சாலை அமைப்பு?
இமாசல பிரதேச மாநிலத்தையொட்டிய தனது எல்லை பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீனா புதிதாக சாலை கட்டமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இமாசல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தை சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்தனர். அப்போது இந்தியாவை நோக்கி புதிய சாலையை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரிய வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதத்தில் சாலை இல்லாத நிலையில், தற்போது மிக வேகமாக சீனா சாலையை கட்டமைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதை மறுத்துள்ள கின்னோர் மாவட்ட நிர்வாகிகள், எல்லை பகுதி மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
Comments