டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் ரூ.20 லட்சம் நன்கொடை
டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 20 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
கார்கில் போரின் வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இப்போரில் வீரத்துடன் போரிட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் 20 லட்சம் ரூபாய்க்கான நன்கொடை காசோலையை அளித்துள்ளார்.
இந்த நிதி, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு பல்வேறு சாதனங்கள் வாங்க பயன்படுத்தப்படவுள்ளது.
Comments