இந்தி நடிகர் சேகர் கபூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு ஏ.ஆர். ரகுமான் பதில்
இழந்த பணமும், புகழும் மீண்டும் கிடைக்கும், ஆனால் வாழ்க்கையில் வீணடிக்கப்பட்ட பொன்னான நேரம் ஒருபோதும் திரும்ப கிடைக்காது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்தி திரையுலகில் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என ஒதுக்கியதில்லை எனவும், ஆனால் ஒரு குழு தமக்கு எதிராக வதந்தி பரப்புகிறது எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஹிந்தி நடிகரும் இயக்குநருமான சேகர் கபூர், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், உங்களுக்கு என்ன பிரச்னை என்பது உங்களுக்கு தெரியும் ஏஆர் ரகுமான், ஹிந்தி திரையுலகுக்கு வந்து ஆஸ்கர் விருதையும் நீங்கள் வாங்கியுள்ளீர்கள், இதுவே அதிக திறமை கொண்டவர் நீங்கள் என்பதை நிரூபிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து ரகுமான் வெளியிட்ட பதிவில், அமைதி, செய்ய வேண்டியது நிறைய உள்ளது, கடந்து செல்வோம் என கூறியுள்ளார்.
Comments