தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தீவிரமாக அமல்
தமிழகம் முழுவதும் தொடர்ந்து 4வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிறுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஏற்கனவே கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 4வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், மாநிலம் தழுவிய தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர்த்து, காய்கறி, மளிகை உட்பட அனைத்து வித கடைகளும், பெட்ரோல் பங்குகளும் அடைக்கப்பட்டன.
சாலைகளும் ஆள்நடமாட்டம், வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு சென்றவர்களையும் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
Tamil Nadu: Streets in Chennai wear a deserted look as the state observes complete lockdown on Sunday; visuals from Guindy and Manali. #COVID19 pic.twitter.com/AsyHBtd7Gd
— ANI (@ANI) July 26, 2020
Comments