ஜனநாயகத்தைக் காக்கப் பிரதமர் வீட்டுமுன் போராடுவோம் என அசோக் கெலாட் அறிவிப்பு
ஜனநாயகத்தைக் காக்கப் பிரதமர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என்றும், தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசுவோம் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர் அசோக் கெலாட், பெரும்பான்மையை நிரூபிக்கச் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என ஆளுநரைக் கேட்டுக்கொண்டார்.
இதை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஏற்காததால் அவர் இல்லத்தின் முன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் மறுத்தால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வலியுறுத்துவோம் எனத் தெரிவித்தார்.
Comments