3 ஆம் கட்ட ஊரடங்கு விலகலுக்கான வழிமுறைகள் தயாராகின்றன

0 63003
3 ஆம் கட்ட ஊரடங்கு விலகலிலும் பள்ளிகள், மெட்ரோ முடங்கும்

ஊரடங்கில் இருந்து விலகும் இரண்டாம் கட்டம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 3 கட்ட விலகல் குறித்த வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 ம் கட்ட விலகல் காலகட்டத்தில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவைகளும் தொடர்ந்து முடங்கி இருக்கும் என கூறப்படுகிறது.

3 ஆம் கட்ட விலகலுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 ஆம் கட்ட ஊரடங்கு விலகலில்,சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி   திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments