பாகிஸ்தானில் இம்மாத இறுதியில் அதிகளவில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என எச்சரிக்கை

0 1653
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தென்மேற்கு ஆசியாவை குறிவைக்கும் வெட்டுக்கிளிகள்

பாகிஸ்தானில் இம்மாத இறுதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அதிகளவில் பாலைவன வெட்டுக்கிளைகள் படையெடுக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியில் இருந்து குறிப்பாக சோமாலியாவிலிருந்து வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் தென்மேற்கு ஆசியாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என தேசிய வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு மைய கூட்டத்தில் பாகிஸ்தான் மத்திய அமைச்சர் ஃபக்ர் இமாம் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டை விட வெட்டுக்கிளிகள் தாக்கம் இந்த முறை 400 மடங்கு அதிகமாக இருக்கும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதன்பொருட்டு தடுப்பு நடவடிக்கைகளில் சுமார் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள், 9 ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments