கார்கில் வெற்றி தினம்: தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியாதை

0 1607
கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றதன் 21ஆவது ஆண்டு தினம்

கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், முப்படைகளின் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1999ஆம் ஆண்டு மே மாதத்தில் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை வெளியேற்றுவதற்காக இந்திய ராணுவத்தினர் போரிட்டனர். 3 மாதங்கள் நீடித்த இந்தப் போர் ஜூலை 26ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் இந்திய ராணுவத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோரும், பாகிஸ்தான் ராணுவத்தில் எழுநூற்றுக்கு மேற்பட்டோரும் உயிரிழந்தனர்.

கார்கில் போரின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி டெல்லியில் போர் நினைவுச்சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங் படாரியா ஆகியோர் கலந்துகொண்டு, போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

லடாக்கில் கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றதன் நினைவாக டிராஸ் என்னுமிடத்தில் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டைக் காக்கும் பணியில் வீரர்களின் உயிர்த்தியாகத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments