தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.177 கோடிக்கு மது விற்பனை

0 2699
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.40.75 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் நேற்று 177கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது.

இன்று தளர்வுகளற்ற முழுஊரடங்கு காரணமாக,  மது அருந்துவோர் நேற்றே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு சரக்குகளை அள்ளிச் சென்றுள்ளனர். இதனால் நேற்று ஒரே நாளில்  177கோடி ரூபாய் அளவுக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

அதிகப்பட்சமாக மதுரை மண்டலத்தில் 40கோடியே 75லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. குறைந்த பட்சமாக சென்னை மண்டலத்தில் 20கோடியே 82லட்சம் ரூபாய் அளவுக்கு மதுவிற்பனையாகியுள்ளது.

கடந்த வார சனிக்கிழமையை  ஒப்பிடுகையில் நேற்றைய விற்பனை 6 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தே காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை 183 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments