நாட்டில் கொரோனா பரவல் புதிய உச்சம்

0 2087
கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகபட்சமாக 48,661 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரத்து 522ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 705 பேர் பலியானதால், உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 63ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 8 லட்சத்து 85 ஆயிரத்து 577 பேர் குணமாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 368ஆகவும், பலி எண்ணிக்கை 13 ஆயிரத்து 389ஆகவும் அதிகரித்துள்ளது. 2ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆகவும், 3ம் இடத்திலுள்ள டெல்லியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 531ஆகவும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments