மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு உரை
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி நிகழ்ச்சியின் மூலம் இன்று காலை உரை நிகழ்த்தவுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்வைக்கும் கருத்துகள், யோசனைகள் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கால வானொலி நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தார். இது நாடு முழுவதும் மக்களால் பரவலால் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆல் இந்தியா ரேடியோ வானொலி மூலம் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார். அந்த உரையில் பிரதமர் மோடி, முக்கிய அறிவிப்பு மற்றும் யோசனைகளை முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments