சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை குழுவில் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா

0 1959
சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் குழுவில், மேலும் ஒரு அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் குழுவில், மேலும் ஒரு அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 10ம் தேதி முதல், 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர்களுள் ஏற்கனவே 4 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் சிபிஐ விசாரணை குழுவை சேர்ந்த மேலும் ஒரு அதிகாரிக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சிபிஐ விசாரணை தாமதாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments