வெள்ளம், நிலச்சரிவுகளால் சிக்கிமில் கிராமங்கள் துண்டிப்பு : ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன
சிக்கிம் மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய விமானப்படை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வடக்கு சிக்கிமில் உள்ள சக்யோங் மற்றும் பென்டோங் கிராமங்கள் நகரப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டன. மேலும் கடுமையான மழையாலும், பல பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாலும் ஸோங்கு என்ற பகுதியும் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து மாநில அரசு இந்திய விமானப் படையின் உதவியை நாடியது. இதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் Mi-17V5 என்ற ஹெலிகாப்டர்கள் மூலம் கிட்டதட்ட 6 டன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஜூலை 21 முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
TNT | SIKKIM
— TNT-The Northeast Today (@TNT_Magazine) July 25, 2020
Indian Air force comes to rescue cut off villages in North #Sikkim with supplies
DETAILS:https://t.co/NAc1FqQoNk
Comments