கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் முழு ஊரடங்கு
பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று இரவு 9 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வுகளும் இன்றி அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்துப்படுகிறது.
அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, பெங்களூருவில் மட்டும் கொரோனா வைரசால் சுமார் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் அநாவசியமாக சுற்றித்திரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
Karnataka: Lockdown being observed in Shivamogga district, in the wake of #COVID19. Essential services exempted. pic.twitter.com/UA9zQmxrXK
— ANI (@ANI) July 26, 2020
Comments