இந்தியாவில் 1,600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை
இந்தியாவில் 1,600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் புனேயை சேர்ந்த மருந்து நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் என்ற மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ‘கோவிட்ஷீல்டு’ என்று இந்தியாவில் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் 2-வது, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைக்கான நடவடிக்கையை சீரம் இன்ஸ்டிடியுட் முடுக்கி விட்டுள்ளது.
அந்த வகையில், இதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்து உள்ளது. 18 வயதான 1600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments