பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டிய அவசியமில்லை - சதீஷ் மராத்தே

0 1926
நாட்டின் வளர்ச்சிக்காக பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டிய அவசியமில்லை என, ரிசர்வ் வங்கியின் வாரிய குழு உறுப்பினர் சதீஷ் மராத்தே தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டிய அவசியமில்லை என, ரிசர்வ் வங்கியின் வாரிய குழு உறுப்பினர் சதீஷ் மராத்தே தெரிவித்துள்ளார்.

வங்கிகள் தேசியமயமாக்கலின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்லைனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றவர், பொதுத்துறை வங்கிகள் எதிர்காலத்திற்கு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க அவற்றின் அமைப்புகள், செயல்முறைகள் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கக் கூடிய 26 சதவீதம் வரையிலான பங்குகளை அரசு கையிருப்பு வைத்துக்கொண்டு, மீதமுள்ள பங்குகளை இந்தியர்களுக்கு விற்பனை செய்து முதலீட்டை அதிகரிக்கலாம் எனவும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments