தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த சீக்கிய அமைப்பு திட்டம்: அங்கீகாரம் இல்லை என கனடா அறிவிப்பு

0 6195
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை மதிப்பதாக அறிவிப்பு

சீக்கியர்களுக்குத் தனிநாடு கோரி காலிஸ்தான் அமைப்பு நடத்தும் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்னும் அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபைத் தனியாகப் பிரித்துக் காலிஸ்தான் தனி நாடு கோருவது குறித்து வெளிநாடுவாழ் சீக்கியர்களிடம் வரும் நவம்பரில் பொது வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடாது எனக் கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் கனடா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சலில் அளித்த பதிலில், இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிப்பதாகவும், சீக்கியர்களின் பொதுவாக்கெடுப்பை கனடா அங்கீகரிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments