நாட்டில் முதன்முறையாக ஒரே நாளில் 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை
நாட்டில் ஒரே நாளில் சாதனை அளவாக 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சக அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 49 ஆயிரத்து 68 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் உயிரிழப்பு கணிசமாக குறைந்துள்ளதாகவும், உயிரிழப்பு விகிதம் 2 புள்ளி 35 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 32,223 பேர் குணமடைந்துள்ளதாகவும், குணமானோர் விகிதம் 63 புள்ளி 54 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments