புதுச்சேரி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு - பேரவை நிகழ்வுகள் நடைபெறும் அரங்கம் மூடல்

0 1853
புதுச்சேரியில் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக வழக்கமாக பேரவை நிகழ்வுகள் நடைபெறும் அரங்கு மூடப்பட்டு, திறந்தவெளியிலேயே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.

புதுச்சேரியில் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக வழக்கமாக பேரவை நிகழ்வுகள் நடைபெறும் அரங்கு மூடப்பட்டு, திறந்தவெளியிலேயே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.

கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், இரண்டு நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த காரணத்தினால், முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகம் மூடப்பட்டுள்ளதால்,  பேரவை வளாகத்திலேயே சாமியானா பந்தல், சிவப்பு கம்பளம் போட்டு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நண்பகலுக்கு மேல் தொடங்கி திறந்த வெளியிலேயே நடைபெற்றது.

இந்த நிலையில், எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரை போதிய கால அவகாசத்திற்கு ஒத்தி வைக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments