ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை : ஊரடங்கு காலத்தில் இதுவரை 143 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 1715
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உள்பட அந்த அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உள்பட அந்த அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரின் ரன்பீர்கார் பகுதியில் ரகசியத் தகவலின்பேரில் ராணுவம், சிஆர்பிஎப், போலீசார் ஆகியோர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இந்த சண்டையில்  லஷ்கர் இ தொய்பா மூத்த கமாண்டர்களில் ஒருவரான இஷ்பக் ரசித் கான் , லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஏய்சாஜ் அகமது  ஆகியோர்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரபடுத்தியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 143 பேரை அவர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments