இந்திய விமானப்படையின் மேற்கு பிரிவிற்கு புதிய தளபதி நியமனம்

0 1637
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் பதற்றம் நிலவும் சூழலில், இந்திய விமானப்படையின் மேற்கு பிரிவு புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் பதற்றம் நிலவும் சூழலில், இந்திய விமானப்படையின் மேற்கு பிரிவு புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விமானப்படையின் கிழக்கு படைப்பிரிவில் மூத்த தளபதியாக பணியாற்றி வரும் அவர், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி மேற்கு படைபிரிவின் புதிய தளபதியாக பொறுப்பேற்கிறார்.

மிக் -21, மிக் - 23எம்.எப், மிக்-29, எஸ்யூ-30எம்.கே.ஐ உட்பட அதிநவீன போர்விமானங்களை இயக்கியுள்ள அவர், ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையில் இணைப்பதிலும் பங்காற்றியுள்ளார்.

லடாக் எல்லை மற்றும் வடக்கு பகுதிகளில் விமானப்படையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்கு படைப்பிரிவின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments