மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிகளால் சீன நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்

0 11773
அரசு ஒப்பந்தங்களை பெற மத்திய அரசு வகுத்துள்ள புதிய பாதுகாப்பு விதிகளால், சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஒப்பந்தங்களை பெற மத்திய அரசு வகுத்துள்ள புதிய பாதுகாப்பு விதிகளால், சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, சீனாவில் இருந்து வரும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தானியங்கி முறையில் ஒப்புதல் அளிப்பதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதற்கு முன்னரே, அந்நிய நேரடி முதலீட்டு வழியில், இந்தியாவில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள், அரசு ஒப்பந்தங்களை பெற வேண்டுமானால் புதிதாக பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட இந்த புதிய வழிகாட்டு நெறிமுறயால், சீனாவை சேர்ந்த செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

ஸ்மார்ட்ஃபோன் தயாரிக்கும் Xiaomi, Oppo, தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிக்கும் Huawei மற்றும் ZTE, மின்துறையை சேர்ந்த Dongfang மற்றும் China Light and Power ஆகிய சீன நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை Government e-Marketplace எனப்படும் ஆன்லைன் பொது கொள்முதல் தளத்தில் விற்பனை செய்ய வேண்டுமானால், புதிதாக ஒப்புதல் மற்றும் பதிவு பெறவேண்டும். உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு இந்த ஒப்புதலை தரவேண்டும் என்பதால், சீன நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments