தேர்வுகள் ஒத்திவைப்பால் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படும் அபாயம் : பல்கலைகழக மானியக் குழு
தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதால் நாட்டில் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் மகாராஷ்டிராவில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைக்கவும், பிற ஆண்டுகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பல்கலைகழக மானியக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மராட்டிய அரசின் முடிவு ஜூலை 6ல் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக இருப்பதாகவும், தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை அடுத்த பருவத்துக்கு அனுப்புவது, நாட்டின் உயர்கல்வியின் தரத்தை நேரடியாக பாதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் இந்த முடிவுகள், மற்றொரு சிறப்பு சட்டமான யூஜிசி சட்ட விதிகளை மீறுவது போன்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments