கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சகம் தகவல்

0 1556
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்தோரில் பலருக்கு மூச்சுக் கோளாறு, இதயக் கோளாறு, கண் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட ஏதாவதொரு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

உடல் சோம்பல், உறக்கமின்மை, உடல் வலி, பசியின்மை, காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு ஆகிய அறிகுறிகளும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. இவற்றைச் சமாளிக்கும் வகையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டுதல்களை மத்திய நலவாழ்வு அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கி வருகிறது.

இந்தக் குழுவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, உலக நலவாழ்வு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments