கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சியில் விற்பனை செய்யப்பட்டதா ?
கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சியில் விற்பனை செய்யப்பட்டதா? என சுங்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணையை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் போலி முத்திரையை பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், அவரது கூட்டாளிகள் சரித், சந்தீப்நாயர், ரமீஸ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தப்படும் தங்கம் பெருமளவு தமிழகத்தில் திருச்சியிலும், மராட்டியத்தில் உள்ள சாங்கிலிக்கும் கொண்டு செல்லப்பட்டு நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்பட்டதாக, சுங்கத் துறையினரிடம் விசாரணையின்போது ரமீஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடைசியாக 30 கிலோ தங்கம் பிடிபட்டதை அறிந்த உடன், அதற்கு முன்பு கடத்திய தங்கம் திருச்சி கொண்டுவந்து விற்பனை செய்யப்பட்டது என, ரமீஸ் கூறியதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் தங்கத்தை வாங்கிய திருச்சி வியாபாரி யார்? யார் யாருக்கு இதில் தொடர்புள்ளது? நேரடியாக விற்பனை செய்யப்பட்டதா? மீடியேட்டர்கள் மூலம் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments