இந்திய வங்கிகளின் வாராக்கடன் விகிதம் 2021 மார்ச் இறுதியில் 12 புள்ளி 5 விழுக்காடாக உயரும்-ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
இந்திய வங்கிகளின் வாராக்கடன் விகிதம் 2021 மார்ச் இறுதியில் 12 புள்ளி 5 விழுக்காடாக உயரக் கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகளின் நிதி நிலைத்தன்மை பற்றிய அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கால் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தேசிய அளவில் நீண்டகாலம் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதாகவும், அதன் விளைவாக வங்கிகளில் வாராக்கடன் விகிதம் அதிகரிக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 2021 மார்ச் இறுதியில் நிலுவையில் உள்ள கடன்களில் வாராக்கடன் விகிதம் 12 புள்ளி 5 விழுக்காடாக உயரக் கூடும் என எச்சரித்துள்ளது.
Comments