பட்டபகலில் நகைக்கடைக்குள் புகுந்து 7 கிலோ தங்க நகை, ரூ.30 லட்சம் திருடிய 4 பேரை 6 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நகைக்கடையில் பட்டபகலில் புகுந்து 7 கிலோ தங்க நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
சாய்சரண் என்ற நகைக்கடைக்குள் காலையில் புகுந்த 4 பேர், அங்கிருந்த ஊழியர் விக்ரம் சிங்கை பிளேடால் காயப்படுத்தி கட்டிப்போட்டு, சாவியை எடுத்து லாக்கரில் இருந்து நகை, பணம், சிசிடிவி கேமரா பதிவை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊழியர் விக்ரம் தந்த தகவலின்பேரில் கடைக்கு வந்த உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் சிசிடிவி பதிவை கடைக்கு எதிரே உள்ள கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக நடத்திய வாகனச் சோதனையில் ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். நகைகள் மற்றும் பணத்தையும் மீட்டனர். மேலும், ஊழியர் விக்ரமும் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments