மாணவர் சேர்க்கை வதந்தி - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை சூளைமேட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று, ஆகஸ்ட் 3 முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று நோட்டீஸ் ஒட்டியதாக தகவல் வெளியானது. மேலும் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை என்றும் ஒரு தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் +1 மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது எனக் கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை, நோட்டீஸ் ஒட்டிய அரசு உதவி பெறும் பள்ளியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments