புதுச்சேரியில் எம்ஜிஆர் திருவுருவச் சிலை அவமதிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

0 4430
புதுச்சேரியில் எம்ஜிஆர் திருவுருவச் சிலை அவமதிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

புதுச்சேரியில், எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு காவித்துண்டு அணிவித்து, அவமரியாதை செய்தவர்களை சட் டத்தின் முன் நிறுத்தி, அம் மாநில அரசு விரைந்து தண்டிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக இதுபோன்று, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது  அல்லது களங் கப்படுத்துவது போன்ற செயல்கள் நிகழ்வதாக  வேதனை தெரிவித்துள்ளார். 

ஒருமைப்பாடு -  ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கவும், அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப் பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments