டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதா-அமெரிக்க செனட் சபை கமிட்டி ஒப்புதல்
அமெரிக்க அரசு சாதனங்களில் டிக் டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
சீன அரசால் 2017இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தில், உளவுத்தகவல் திரட்டும் பணிக்கு சீன நிறுவனங்கள் ஒத்துழைக்க கடமைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் டிக்டாக் போன்ற சீன செயலிகளை பயன்படுத்தும் இந்தியர்களின் தரவுகள் (data) அந்நாட்டு அரசுக்கு செல்லும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டி இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையிலும் இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது செனட் சபைக்கான உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசு விவகாரங்கள் துறை கமிட்டியும் ஒப்புதல் அளித்திருப்பதால், செனட் சபை வாக்கெடுப்புக்கு செல்கிறது. அங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு, டிக் டாக் செயலி மீதான தடை அமலுக்கு வரும்.
Comments