உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாதவரை மருத்துவராக எப்படி ஏற்க முடியும்? திருத்தணிகாசலத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 3541

சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக் கொண்டு உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாதவரை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போலி சித்த மருத்துவர் என அரசால் அறிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலத்தின் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கிருபாகரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தணிகாசலம் தரப்பில், சித்த மருத்துவத்தை முறையாக படிக்கவில்லை என்றாலும், பரம்பரை வைத்திய முறை மற்றும் பணியாற்றிய அனுபவம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் மருத்துவர்களை விட கம்பவுண்டராக இருப்பவர்கள் அதிக அனுபவ அறிவு இருக்கும் அதற்காக அவர் மருத்துவம் அளிப்பதை ஏற்கமுடியுமா?அல்லது அவர்களை மருத்துவர்களாக கருத முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். முதலமைச்சரை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா எனவும் வினவினர்.

குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனு மீது தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். திருதணிகாசலம் கண்டுபிடித்தாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பிய கொரானா தடுப்பு மருந்து தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments