ரஜினிகாந்த் இன்றைக்குப் பெற்ற இ பாஸ் சமூக வலைத்தளத்தில் வைரல்

0 52922

நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்துக்குச் சென்றுவந்ததற்கு இ பாஸ் பெற்றாரா எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் இன்று சென்றுவருவதற்காக எடுத்துள்ள இ பாஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்க கடைப்பிடிக்கப்படும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று வந்தார்.

அதற்கு அவர் இ பாஸ் பெற்றிருந்தாரா எனக் கேள்வி எழுந்தது. அது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இ பாஸ் பெறாமல் சென்றிருந்தால் அது குறித்துக் காவல்நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இதனிடையே சென்னையில் இருந்து கேளம்பாக்கத்துக்குச் இன்று செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் எடுத்த இ பாஸ் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இன்றைய இ பாஸ் படம் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் அவர் ஏற்கெனவே செல்வதற்கு இ பாஸ் எடுத்தாரா என்கிற கேள்வி மேலும் வலுப்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments