பிளஸ் 2 முடித்து கல்லூரி தேர்வு செய்யும் மாணவர்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல இ - பாஸ் வாங்குவதில் சிக்கல்

0 1858
12ஆம் வகுப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் முனைப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பிற மாவட்டங்கள் செல்ல வசதியாக இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

12ஆம் வகுப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் முனைப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பிற மாவட்டங்கள் செல்ல வசதியாக இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு முன் நேரில் சென்று அக்கல்லூரி குறித்து விசாரித்து அதன் பின்பு கல்லூரிகளில் சேருவது வழக்கமாக இருந்து வரும் சூழ்நிலையில், தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதனால் மாணவர்கள் கல்லூரியை நேரில் சென்று பார்த்து வருவதற்கு இ-பாஸ் பெறுவது தற்போது பெரும் சவாலாக உள்ளது. இதனால் தமிழக அரசு உடனடியாக இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments